Advertisement

Main Ad

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு

ஜப்பானிய சனத்தொகையில் வயது கூடியவர்கள் அதிகரித்து வரும் நிலையில் ஆங்கில அறிவுடன் கூடிய வெளிநாட்டவருக்கான தொழில் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார் சர்வதேச ஜப்பாயின பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்.எஸ் குரே.

 மக்கள் செய்தி

2020ல் ஜப்பானில் ஒலிம்பிக்கும் இடம்பெறவிருக்கும் நிலையில் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழியிலான கற்கை நெறிகள் அதிகரிக்கப்படுவதாகவும் குறிப்பாக இலங்கை மாணவர்களைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் ஆங்கில அறிவுடன் கூடிய துறைசார் நிபுணர்களுக்கு அங்கு வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாகவும் குறிப்பாக மாணவர்களுக்க நல்ல வாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்வதைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் இவ்வாறான வாய்ப்புகள் பற்றிய தகவல்களும் வெளிவருகின்றன. அங்க கற்று வெளியேறும் பட்டதாரிகளுக்கு ஜப்பானில் நல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கே. இன்திகாப்