Advertisement

Main Ad

41 நாளுக்கு ஒரு முறை தோல் உரியும் உடல்: தவிக்கும் 16 வயது பாம்பு இளைஞன் !



41 நாளுக்கு ஒரு முறை தோல் உரியும் உடல்: தவிக்கும் 16 வயது பாம்பு இளைஞன்
இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞன் அரி விபோவோ விநோதமான நோயால் அவதிப்பட்டு வருகிறான். அவனது உடலில் உள்ள தோல் 41 நாளுக்கு ஒரு முறை உரிகிறது.

எரித்ரோடெர்மா என்றழைக்கப்படும் சிவப்பு தோல் நோயால் அவதிப்படும் இந்த இளைஞன் தனது உடலில் உள்ள பாம்பு தோல் போல் காணப்படும் தோலை 41 நாளுக்கு ஒரு முறை உரித்து விடுகிறான். அது மட்டும் அல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நீரில் மூழ்கி எழுந்தால் தான் அவனால் உயிர் வாழவே முடியும் என்பதால் நாள்தோறும் நீரில் மூழ்கி வாழ்கிறான்.

மேலும் தனது தோல் சுருங்காமல் இருப்பதற்காக மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை உடலில் திரவம் ஒன்றையும் தடவிக்கொள்கிறான். அவ்வாறு தடவா விட்டால் அவனது உடல் சிலை போல் ஆகிவிடுகிறது. இதனால் அவனால் நகரக்கூட முடியாது. இந்த நிலை நீடித்தால் அவனால் பேசக்கூட முடியாது.

கடந்த 16 வருடங்களாக அவன் இப்படித்தான் உயிர் வாழ்ந்து வருகிறான். அவனுக்கு ஏற்பட்டுள்ள விநோதமான நோய் குறித்து புகைப்படக்காரரான நுர்ச்சொலிஸ் அன்ஹரி லுபிஸ் ஆவணப்படம் எடுத்துள்ளார். அதில் அவனுக்கு தலை முதல் கால் வரை உடல் முழுதும் பாம்பு தோல் போல் காணப்படுவதாக லுபிஸ் கூறியுள்ளார். பார்ப்பதற்கு உடலில் தீக்காயம் ஏற்பட்டது போல் அது காட்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் மனதால் விபோவா எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. தனது சொந்த ஊரில் சராசரி வாழ்க்கை வாழ்ந்து வரும் அவன் மற்றவர்களை போல் அன்றாட உணவையும் சாப்பிடுகிறான். ஆனால் அவனது உடல் தான் அவனுக்கு பெரும் சிரமத்தை தருகிறது என்று அவனது குடும்பத்தினர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

அவனுக்கு ஏற்பட்ட இந்நோய்க்கு தங்களால் எந்த சிகிச்சையும் அளிக்கமுடியாது என மருத்துவர்கள் அவனது பெற்றோரிடம் தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.