ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய பெறுபேறுகளை WWW.DOENETS.LK என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்
அழுத்துங்கள்
இதேவேளை, ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்ட ரீதியிலான வெட்டுப் புள்ளிகளும் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி 158 என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, இரத்தினப்புரி மற்றும் பொலன்நறுவை மாவட்டங்களில் உள்ள தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி 157 என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, , மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி 159 எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஹம்பாந்தோட்டை , அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கான தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி 155 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் முதல் இடங்களை பெற்ற மாணவர்களை மதீப்பீடு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.