ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் பொதுச்சபை கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையும், சபையில் அங்கத்துவம் வகின்ற அனைத்து நாடுகளும் பல ஆண்டுகளாக இஸ்ரேலின் அடக்கு முறைகளினாலும், இன சுத்திகரிப்பினாலும் அல்லருகின்ற பாலஸ்தீன் மக்கள் அவர்கள் சுயமாக அவர்களுடைய நிலத்தினை அவர்கள் ஆழும் படியாக சுயாட்ச்சியினை அங்கீகரிக்க வேண்டும் என பகிரங்கமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.
இவ்வாறு எமது அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றியமையானது முஸ்லிம் நாடுகளின் தலைவர்களின் கவணத்தை ஈர்த்ததோடுஇ இலங்கையில் அன்மைக்காலங்களில் அரசாங்கத்தை பற்றி முஸ்லிம்கள் மத்தியில் இருந்து வருகின்ற அதிருப்தி நிலையானது மாற்றமடைந்து ஜனாதிபதியின் மீதும் அரசாங்கத்தின் மீதும் மதிப்பும் நம்பிக்கையும் அதிகரிக்க வாய்ப்பாகவும் அமைந்துள்ளதாக காணப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர்இ அங்கு வருகை தந்திருந்த பலஸ்தீன் நாட்டு ஜனாதிபதி மொஹமட் அப்பாஸை சந்தித்து கலந்துரையாடியதோடு ஏற்கனவே பாலஸ்தீனுக்கு வழங்குவதாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டிருந்த பத்து இலட்ச்சம் அமெரிக்க டொலர்களை, இந்த சந்திப்பின் போது பலஸ்தீன் ஜனாதி மொஹமட் அப்பாஸிடம் எமது அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்..
இந்த விடயம் தொடர்பாக இலக்கைகான பாலசஸ்தீன தூதுவர் டொக்டர் அன்வர் அல் அக்ஹா கூறுகையில் இலங்கையும், மக்களும் என்றும் பலஸ்தீன் மக்களின் துயரங்களில் பங்கு கொள்கின்றவர்கள் என்றும் விசேடமாக இலங்கை ஜனாதிபதி அவர்கள் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பலசஸ்தீன் தேசத்துடன் நட்பினை பேனிவருகின்ற சிறந்த மணிதர் என கூறியதோடு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை எதிர்நோக்கின்ற பிரச்சனைகளுக்கு என்றும் பாலஸ்தீன் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் என உறுதிப்பட ஊடகங்களுக்கு தெரிவித்தார்.