பலாங்கொட – இரத்தினபுரி பிரதான வீதியின் பெலிகல சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.
தேர்தல் பணிகளுக்காக சென்று மீண்டும் கொழும்பு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த வேன், அதே திசையில் பயணித்த பஸ் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


