-Razana Manaf-
ஆசிய நாட்டை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்சின்
நகரங்களில் ஒன்றான அல் ஐனில் சற்றுமுன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.வீதியோரத்தில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் சற்றுமுன் பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது..
மரக்கிளையில் கயிற்றின் மூலம் சுருக்கிட்டு தன்னை தானே மாய்த்துக்கொண்டுள்ளார் பாதசாரிகள் பொலிசாருக்கு கொடுத்த தகவலின் அடிபப்டையில் சம்பவ இடத்திற்கு அம்பியூலன்ஸ் வாகனத்துடன் விரைந்த பொலிசார் சடலத்தை கீழே இறக்கும்போது அந்த நபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினர்.
சடலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்..
இறந்த நபர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை பொலிசார் உடனடியாக வெளிப்படுத்தவில்லை.


