By (Ashraff.A.Samad)
யுனெஸ்கோ அமைப்பின் உலக மரபுரிமைப் பகுதியான காலி கோட்டையில் அமைந்துள்ள காலி ஒல்லாந்தர் வைத்தியசாலை வணிக வளாகம்
(Dutch Hospital Shopping Complex) நேற்றைய தினம் (செப். 20) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது.
காலி நகரை சுற்றுலாத்துறை பகுதியாக விருத்திசெய்யும் நோக்கத்துடன் வரலாற்றுப்புகழ்வாய்ந்த டச்சு வைத்தியசாலையானது வணிக வளாகமாக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மீள்புனரமைப்புச் செய்யப்பட்டு, மாற்றப்பட்டுள்ளது. மஹிந்த சிந்தனையினால் தூரநோக்கிடப்பட்டதன்படி, 2016ம் ஆண்டிற்கு முன்னதாக வருடந்தோறும் 2.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளைக் கவருவதை இந்த வேலைத்திட்டங்கள் நோக்காகக் கொண்டுள்ளன.