Advertisement

Main Ad

பிரித்தானியாவைக் கலக்கும் சவூதி சுற்றுலாப் பயணியின் “தங்கக் கார் (photos)

சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த நப­ரொ­ருவர் தங்கக் காருடன் பிரித்­தா­னி­யா­வுக்கு சுற்­றுலா சென்று அங்­குள்­ள­வர்­களை வாயைப் பிளக்­கு­ம­ள­வுக்குஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.

செல்­வந்­த­ரான மேற்­படி சவூதி சுற்­றுலாப் பயணி பிரித்­தா­னி­யாவின் நைட்ஸ்­பிரிட்ஜ் நக­ரி­லுள்ள அல்ட்ரா – லூக்ஸ் வெலெஸ்லி ஹோட்­டலில் தங்­கி­யுள்ளார். இந்த ஹோட்­ட­லுக்கு வெளி­யிலே தனது ‘தங்கக் கார்’ நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­கா­ரினைப் பார்­வை­யிட அப்­ப­கு­தியை சேர்ந்த பிரித்­தா­னிய மக்கள் பலரும் ஆர்வம் காட்­டு­கின்­றனர். அத்­துடன் அதனைப் புகைப்­ப­ட­மெ­டுத்து இணை­யத்­த­ளத்தில் தர­வேற்றி மகிழ்ந்­துள்­ளனர்.

பல­ரையும் ஈர்த்­துள்ள இக்­காரின் பெறு­மதி சுமார் 32 கோடி ஆகும். ரேன்ஜ் ரோவர் காரின் சாதார மாதிரி ஒன்­றினை வெளிப்­பு­ற­மாக தங்க முலாம் மற்றும் கறுப்பு வர்­ணத்தில் அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் காரின் சக்­க­ரத்தின் சில்­லுகள், பொனட் மற்றும் பம்பர் போன்­ற­னவும் வீதிக்கு வெளி­யிலும் ஓடக்­கூ­டி­ய­வாறு ‘ஓப் ரோட்’ வாக­ன­மாக மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளது.
த மிஸ்­டெயார் என்று அழைக்­கப்­படும் இந்த ரேன்ஜ் ரோவர் மாதி­ரியை உரு­வாக்க ஒரு கோடி ரூபா­வுக்கும் அதி­க­மான தொகை செல­வி­டப்­பட்­டுள்­ளதாம். பார்ப்­ப­வர்­களை ஈர்க்கும் த மிஸ்­டெயார் மாதிரி கார் குறித்து பிரித்­தா­னிய நபர் ஒருவர் கூறு­கையில், இக்­கா­ருக்கு அரு­கி­லேயே ரோல்ஸ் ரோய்ஸ் கோஸ்ட் கார் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் அது பார்­வைக்கு தரம் குறைந்த கார் போன்று உள்­ளது’ எனத் தெரி­வித்­துள்ளார். ’666′ எனும் இலக்­கத்தைக் கொண்ட இக்­கா­ரினை செல்­வந்­த­ரான சவூதி சுற்­றுலாப் பயணி தனது விடு­முறைக்­காக பிரித்­தா­னியா செல்லும் போது கப்பலில் கொண்டு சென்றுள்ளார்.

இக்கார் வீதியில் செல்லும்போதும் தரித்திருக்கும் போதும் ஆச்சரியமாக பார்வையிட்டு வருகின்றனர்.

6486Untitled-30
6486Untitled-31