Advertisement

Main Ad

விண்ணில் தோன்றும் சூப்பர்மூனால் பூமிக்கு ஆபத்தா?


MOHAMED RINSATH
 
சந்திரன் தனது வட்ட பாதையில் சுற்றி வரும்பொழுது பூமியை  நோக்கி நெருங்கி சில நேரங்களில் வரும்.  இதற்கு சூப்பர்மூன் என்று பெயர்.  இந்த நிகழ்வு நாளை (ஆகஸ்டு 10) விண்ணில் தோன்றுகிறது.  பூமிக்கு மிக அருகில் வருவதால் பார்ப்பதற்கு வழக்கத்தை விட சற்று பெரியதாக நிலவு காட்சி தரும்.  சந்திரனின் இந்த மாறுபட்ட இயக்கத்தால் பூமியில் மாற்றங்கள் ஏற்படும் என மத கோட்பாடுகளில் தீவிரமான சிலர் நம்புகின்றனர்.

நிலவின் இயக்கம் காரணமாக பூமியில் நிலநடுக்க அபாயங்களும், பிளேக் போன்ற உயிர்க்கொல்லி வியாதிகளும் மற்றும் எரிமலை சீற்றங்களும் அதிகரிக்க கூடும் என்பது அவர்களின் நம்பிக்கை என்று டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி இதழ் தெரிவித்துள்ளது.  பூமியை நெருங்கும்போது வானில் மிக அதிக வெளிச்சம் காணப்படும்.  இதன் தாக்கத்தால், பூமியில் அலைகள் அதிக உயரத்துடன் எழும்பும்.  பூமியின் அடுக்குகள் இடம் பெயரும்.

கடல் மட்டங்கள் உயரும்

பூமியை மாலை 6 மணியளவில் நெருங்கும்பொழுது சந்திரன் 2 லட்சத்து 21 ஆயிரத்து 765 மைல்கள் தொலைவில் இருக்கும்.  அப்பொழுது, 16 சதவீதம் பெரியதாகவும் மற்றும் 30 சதவீதம் அதிக வெளிச்சத்துடனும் அது இருக்கும்.  பூமியை வழக்கத்திற்கு மாறாக 863 மைல்கள் அருகில் நிலவு நெருங்கி வரும்.  இதனால் கடல் மட்டங்கள் உயரும் அபாயம் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.

பெர்த்தா புயல்

சந்திரனின் ஈர்ப்பு விசை பூமியை நெருங்கும்போது அதிகரிப்பதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது.  பூமியில் நிலநடுக்கங்கள், எரிமலை சீற்றங்கள் மற்றும் கடந்த 2004 சுனாமி தாக்கம் உள்ளிட்ட சீற்றம் நிறைந்த உயரமான அலைகள் தோன்றும் அபாயமும் உள்ளது.  தற்பொழுது அட்லாண்டா பகுதியில் சுழன்று கொண்டிருக்கும் பெர்த்தா புயல் நாளை இங்கிலாந்திற்குள் நுழைந்து தாக்கம் ஏற்படுத்துவதற்கும் சூப்பர்மூன் தொடர்பு உண்டு என தகவல் தெரிவிக்கின்றது.