Advertisement

Main Ad

முகப்பருக்களை போக்கும் சில சிம்பிளான இயற்கை வைத்தியங்கள்!


3-greentea

முகப்பருக்களானது முகத்தின் அழகையே கெடுத்துவிடும். இப்படி முகத்தில் பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பது, உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது, சருமத்தை சரியாக பராமரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

முகப்பருக்களை போக்க எந்த பொருட்களையெல்லாம் பயன்படுத்தலாம் என்று இதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்…
எலுமிச்சை சாறு
இரவில் படுக்கும் போது எலுமிச்சை சாற்றினை சிறிது நீரில் கலந்து, இரவில் படுக்கும் போது பருக்களின் மேல் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

கடுகு பொடி
கடுகை பொடி செய்து, அதில் தேன் சேர்த்து கலந்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், அதில் உள்ள சாலிசிலிக் ஆசிட் பருக்களை போக்கிவிடும்.

க்ரீன் டீ
க்ரீன் டீ செய்து, அதனை ஐஸ் க்யூப்பில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கி, பின் அதனை முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், அவை விரைவில் பருக்களை மறையச் செய்யும்.

தக்காளி
தக்காளி சாற்றினை தினமும் இரண்டு முறை முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் இது நல்ல பலன் அளிக்கும்.

லாவெண்டர் ஆயில்
லாவெண்டர் ஆயிலை பிம்பிள் மீது தடவி வந்தால், அவை பிம்பிளை விரைவில் நீக்கிவிடும். ஆனால் இந்த ஆயில் அனைவருக்குமே நல்ல பலனைத் தரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு இந்த எண்ணெய் அரிப்பை ஏற்படுத்தலாம். எனவே உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால், இதனை பயன்படுத்தலாம்.

முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவினால், அவை முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை அகற்றுவதோடு, பருக்கள் இருந்தாலும், அதனை விரைவில் குணமாக்கும்.

பூண்டு
பூண்டினை சாறு எடுத்து, அதனை பிம்பிள் மீது வைத்து, எவ்வளவு நேரம் ஊற வைக்க முடியுமோ அவ்வளவு நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். உண்மையிலேயே பூண்டு பருக்களை விரைவில் போக்கிவிடும்.


க்ளே மாஸ்க்
க்ளே என்னும் களிமண்ணை நீரில் கலந்து, அத்துடன் சிறிது லாவெண்டர் அல்லது டீ ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் போது முகத்தில் தடவி, காலையில் எழுந்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால், பருக்கள் மறைந்துவிடும்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தில் தடவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் போய்விடும்.