jabir jusair
பங்களாதேஷில் 200 பயணிகளை ஏற்றிய படகொன்று இன்று ஆற்றில் கவிழ்ந்துள்ளது. தலைநகர் டாக்காவின் தென்மேற்கு பிராந்தியத்திலுள்ள பத்மா ஆற்றிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற பகுதியில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அனர்தத்தில் சிக்கிய 44 பேர் இதுவரை காப்பற்றப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர்பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மீறி அதிக பயணிகள் படகுகளில் பயணிக்கின்றமை மற்றும் தரமற்ற படகுகளின் காரணமாகவே பங்களாதேஷில் அதிக படகு விபத்துக்கள் பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.