Advertisement

Main Ad

சீனாவில் தென்பட்ட வேற்றுகிரகவாசி: பதற்றத்தில் மக்கள்.....

  சீனாவின் தலைநகர் பீஜிங்கிற்கு அருகில் ஹாய்ரோவ் பகுதியில் விசித்திர விலங்கு ஒன்று நடமாடுவதை சுற்றுலாப் பயணியொருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.  சிறுநீர் கழிப்பதற்காக மறைவான இடத்துக்குச் சென்ற போது இவ்விலங்கு அங்கிருந்ததாகவும் மிக வேகமாக ஓடி மறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  வேற்றுக்கிரகவாசி போல தோற்றமளிக்கும் இந்த விலங்கு குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.  ஜே.ஆர்.ஆர். டொல்கின் என்பவரால் உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரம் போன்றே இந்த உருவம் அமைந்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தில் படமாக்கப்பட்டு பல்வேறு விருதுகளை பெற்றுக்கொண்ட 'த லோர்ட் ஒப் த ரிங்ஸ்' திரைப்படத்தில் இக்கதாப்பாத்திரம் வெளிக்கொண்டுவரப்பட்டது.  அதனைப் போன்ற மிருகம் ஒன்றே சீனாவில் தற்போது இனங்காணப்பட்டுள்ளது. இவ்விலங்கு வேற்றுகிரகவாசியா அல்லது விலங்கு தானா என்பதில் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் மக்கள்.