Advertisement

Main Ad

ரொப்சன் கன்னி சதம்; ஸ்திர நிலையை அடைந்தது இங்கிலாந்து


ரொப்சன் கன்னி சதம்; ஸ்திர நிலையை அடைந்தது இங்கிலாந்து rahman bari
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ​போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இனிங்ஸில் வலுவான நிலையை அடைந்துள்ளது.

லீட்ஸ் மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இனிங்ஸில் 6 விக்கெட்டுக்களை இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் சேம் ரொப்சன் தனது முதல் டெஸ்ட் சதத்தை பெற்று அணியின் ஸ்திர நிலைக்கு வழிவகுத்தார்.

ரொப்சன் 127 ஓட்டங்களையும், கெரி பெலன்ஸ் 74 ஓட்டங்களையும் பெற்றனர். சமிந்த எரங்க மற்றும் அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இலங்கை அணி தனது முதல் இனிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றது. குமார் சங்கக்கார 79 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.