ஆர்ஜென்டினா அணி நைஜீரியவை 3-2 எனும் கணக்கில் வென்றது. எனினும் நைஜீரியாவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
போஸ்னியா ஹெர்சகோவினா, இரானை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றிருந்தாலும், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது போயுள்ளது.
இந்தப் போட்டிகள் ‘எஃப்’ பிரிவில் நடைபெற்றன. இந்தப் பிரிவில் முதல் இரண்டு இடங்களை ஆர்ஜென்டினா மற்றும் நைஜீரியா ஆகிய அணிகள் பெற்றுள்ளன.
ஆர்ஜென்டினா இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வென்றதன் மூலம் 9 புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ளது.
நைஜீரிய அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி ஆகியவற்றுடன் இரானுக்கு எதிரான போட்டி சம நிலையில் நிறைவு பெற்றாலும், 4 புள்ளிகளை பெற்றுள்ளது.
இரானை வென்றதன் மூலம் 3 புள்ளிகளைப் பெறும் போஸ்னியா ஹெர்சகோவினா மூன்றாம் இடத்திலும், இரான் ஒரு புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
இதனிடையே உருகுவே நாட்டு வீரர் லூயிஸ் சுவாரஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகள் ஃபிஃபாவால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
