Advertisement

Main Ad

சமூகத்தின் பாதுகாப்பிற்காக நான் உறக்கமின்றி பணியாற்றிவருகிறேன். ஆனால் என்னை கொல்வதற்கு பத்வா கிடைதுள்ளதாக அச்சுறுத்தல் விடுக்கபடுகின்றது.


Aswer-1_0

என்னை கொல்வதற்கு  பத்வா கிடைதுள்ளதாகக் கூறி தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ எச் எம் அஸ்வர் ஊடகங்களுக்கு  தெரிவித்தார் .

இது தொடர்பில்அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் சமுகத்தின் பாதுகாப்பிற்காக நான் உறக்கமின்றி பணியாற்றிவருகிறேன்.

உயர் மட்ட தரப்புகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.
ஆனால் எனக்கு தொலைபெசிமுலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது எனக்கெதிராக பத்வா வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்வதற்கு அண்மையில் ஜனாதிபதி பதுளையில் முஸ்லிம் அமைச்சர்களுடன் ஒரு உடன்படிக்கைக்கு இணங்கினார். அந்த கூடத்தில்நானும் கலந்துகொண்டேன்.
ஜானதிபதியுடன் முஸ்லிம் அமைச்சர்கள் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுக்கும் படி பொலிஸ் மா அதிபரையும் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர செனனயக்கவையும் வேண்டியுள்ளேன்.

பண்ணல , மல்லவபிட்டிய ,குருந்து கொல்ல பள்ளிவாசல் தாக்குதல்கள் ,தெகிவளை ஹார்கோட் மருந்தக தாக்குதல்களை பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன்.
நோன்பு ஆரம்பமாக இருப்பதால் அணைத்து பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருக்கிறேன் என்றார்.