Advertisement

Main Ad

காத்தான்குடியில் வாகன விபத்து; ஒருவர் பலி, 23 பேர் காயம் ( படங்கள் இணைப்பு )


 MOHAMED RINSATH

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும், அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற கெப் வாகனமும் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளார்.
வேனில் பயணித்த 15 பேரும், கெப் வாகனத்தில் இருந்த 9 பேரும் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.