சாய்ந்தமருது
நகரிலுள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பலசரக்கு கடைகளில்
இன்று புதன்கிழமை பொதுச் சுகாதார பரிசோதகர்களால்
திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது
பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள்
கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் குறித்த வர்த்தகர்கள் கடுமையாக
எச்சரிக்கையும் செய்யப்பட்டனர்.
கல்முனை
மாநகர சபையின் பிரதம சுகாதாரப்
பணிப்பாளர் டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் மற்றும்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி
டாக்டர் சஹீலா இஸ்ஸதீன் ஆகியோரின்
வழிகாட்டலில் மாவட்ட மேற்பார்வை சுகாதார
பரிசோதகர் பி.பேரம்பலம் தலைமையில்
இச்சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில்
கல்முனை மாநகர சபையின் பிரதம
சுகாதாரப் பரிசோதகர் அரியராஜா உட்பட சுகாதாரப் பரிசோதகர்கள்
பலர் கலந்து பங்கேற்றிருந்தனர்.
இதன்போது
சாய்ந்தமருது பொதுச் சந்தை, மரக்கறி
மற்றும் பழக்கடைகள், ஹோட்டல்கள், உணவங்கள், பலசரக்கு கடைகள் போன்றவை தீவிர
சோதனைக்குட்படுத்தப்பட்டன.
பல இடங்களில் காலவதியான் மற்றும் நுகர்வுக்கு பொருத்தமற்ற
உணவுப் பொருட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டன.









