பறிமுதல் செய்யப்பட்ட கருவிகள்
குழந்தைகளை பாலியல் ரீதியாக
ஆபாசமாகக் காட்டும் படங்களை இணையத்தில் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில்
அமெரிக்காவில் எழுபது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் நடத்திய பெரிய அளவிலான நடவடிக்கையில்
கைதானவர்களில் ஒரு யூத மதபோதகர், ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு விமானி
ஆகியோரும் அடங்குவர்.கணினிகள், திறன்பேசிகள் என அறுநூறுக்கும் அதிகமான கருவிகள் ஒரு வாரகால விசாரணையின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எத்தனை பேர் இவ்விதக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதும், எந்தெந்த பொறுப்புகளில் உள்ளவர்களெல்லாம் இதில் ஈடுபடுகிறார்கள் என்பதும் கவலை அளிப்பதாக உள்ளது என இந்த விசாரணைக்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.
