சிட்டகொங் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி பயின்ற
இந்த மாணவன் தனது இலங்கை நண்பர்களை சந்திப்பதற்காக ஏழு மாடி கட்டடத்தின் ஆறாம் மாடிக்கு சென்றுள்ளதாக சிட்டகொங் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பரீட்சை பெறுபேறு தொடர்பில் விரக்த்தியடைந்த நிலையில் இருந்த குறித்த மாணவன் 7 மாடி கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
