சாய்ந்தமருதுவுக்கு தனியான பிரதேச சபை (உள்ளுராட்சி அமைப்பு) ஒன்றினை உருவாக்கும் விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினைச் சேர்ந்த சிலர் விருப்பம் கொள்ளவில்லை தெரிய வந்துள்ளது.
நேற்று (22) அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது ஒரு சிலர் இந்த விடயம் தொடர்பில் தமது நல்லிணக்கத்தை வெளிகாட்டவில்லை என்றும் இதற்கான மாற்றீடான யோசனைகளை முன்வைத்தனர் என்றும் எனக்குக் கிடைத்த பல தரப்பினரதும் தகவல்களில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் நேற்று ஆராயப்பட்ட போது கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் குழு தலைவரும் சாய்ந்தமருதுவைச் சேர்நதவருமான ஏ.எம். ஜெமீல் இவ்வாறு தெரிவித்தார் என என்னிடம் பலராலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
”முன்னாள் கல்முனை மேயரான சிராஸ் மீராசாகிபினால் சாய்ந்தமருதுவுக்கு தனியான பிரதேச சபை ஒன்றின் அவசியம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த ஊரில் எழுந்துள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு (சமாளிப்பதற்கு) சாய்ந்தமருதுவில் கல்முனை மாநகர சபையின் உப அலுவலகம் ஒன்றினையேனும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்ற பொருள்பட ஜெமீல் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் ஹக்கீம் “ பார்க்கலாம்“ என பதிலளித்துள்ளார்.
