Advertisement

Main Ad

77 ஆயிரம் கிலோ கிராம் நிறையுடைய புதிய வகை டைனோஸர் எலும்புகள் மீட்பு : 7 மாடிக் கட்டடத்தின் உயரமும் 14 ஆபிரிக்க யானைகளுக்கும் ஒப்பானது

  77 ஆயிரம் கிலோ கிராம் நிறையுடைய புதிய வகை இராட்சத டைனோஸர் இனம் ஒன்றின் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த இனத்தின் பெயர் டைடோனஸர் ஆகும்.  

   புவியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய விலங்கினம் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது. புவியில் வாழ்ந்த உலகின் மிகப்பாரமானதும் பெரியதுமான விலங்காக அர்ஜென்டினோஸர்ஸ் வகை டைனோஸர்கள் என்ற சாதனையை தன் வசம் வைத்துக்கொண்டுள்ளது. 

 ஆனால் டைடோனஸர் இனமே உலகின் மிகப்பெரிய இனமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தற்போது நம்புகின்றனர். டைடோனஸர் ஒன்றின் நிறை சுமார் 77 ஆயிரம் கிலோ கிராம் என்பதுடன் 40 மீற்றர் நீளமும் உயரமும் 20 மீற்றர் அகலமானது எனக் கூறப்படுகிறது. அதாவது 7 மாடிக் கட்டடத்தின் உயரமும் 14 ஆபிரிக்க யானைகளின் நிறைக்கும் ஒப்பானது எனக் கூறப்படுகின்றது.        கடந்த வருடம் இந்த டைனோஸரின் முதலாவது எச்சம் விவசாயி ஒருவரினால் ஆர்ஜென்டீனாவின் படகோனியா பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து  டொக்டர் ஜோஸ் லூயிஸ் மற்றும் டொக்டர் டியகோ பொல் தலைமையிலான ஆர்ஜென்டீனாவின் பலயன்டொலொஜி விஞ்ஞான நூதனசாலையைச் சேர்ந்த குழுவினால் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.   தற்போது 7 தனியன்களின் 70 ஆயிரம் கிலோ கிராம் நிறையுடைய என்புகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவை குறிப்பிடத்தக்க நிலையில் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் 95 முதல் 100 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த டைடோனஸர் இன டைனோஸர்கள் புவியில் வாழ்ந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.