Advertisement

Main Ad

24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 பல்கலை மாணவிகள் படுகொலை

24 மணி நேரத்தில் 2 பெண்கள் கொலை! இலங்கையை அதிர வைக்கும் சம்பவமாக இது இருக்கிறது. 24 மணி நேரத்தில் கொல்லப்பட்ட 2 பெண்களுமே பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவிகள் ஆவர். 

மாத்தளை பிரதேசத்தில் அடுத்து அடுத்து நடந்த இந்த இரண்டு கொலைகளால், அப்பிரதேசமே ஒரு வித பீதியில் மூழ்கியுள்ளது. சனிக்கிழமை ஒரு பெண், பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கொல்லப் பட்டுள்ளார்கள். 

அதிலும் கடைசியாக கொல்லப்பட்ட பெண், மிகவும் அதிர்சி தரும் வகையில் இறந்துள்ளார் என அறியப்படுகிறது. நிஷானி என்னும் இந்த 24 வயதுப் பெண்ணின் வீட்டில், கடந்த சனிக்கிழமை திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் இரவு அவர் தனது தாயாருடன் படுக்கச் சென்று உறங்கியுள்ளார். ஆனால் மறு நாள் காலை அவரை வீட்டில் காணவில்லை. இதனையடுத்து, நிஷானியின் சகோதரர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். 

குறித்த வீட்டுக்கு வந்த பொலிசார் வீட்டுக்கு அருகில் இருந்த சிறிய காட்டில் தேடுதல் நடத்திய வேளை, கழுத்து வெட்டப்பட்ட நிலையில், மற்றும் நிர்வாணமாக நிஷானியின் உடல் மீட்க்கப் பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்த நிஷானியின் உடல் அருகே, கத்தியை தண்ணீர் ஊற்றி யாரோ கழுவியுள்ள அடையாளம் காணப்படுவதாக கூறப்படுகிறது. கைகளை அல்லது கத்தியை குற்றவாளி தண்ணீர் ஊற்றி கழுவிய பின்னரே அங்கிருந்து சென்றுள்ளார். அவ்வளவு நிதானமாக இக்கொலை இடம் பெற்றுள்ளது எனப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 

இதே வேளை நிஷானி போட்டிருந்த ஆடைகள் களையப்பட்டு, அருகில் இருந்துள்ளது. அந்த ஆடையையும் யாரோ தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளார்கள் என்றும், பின்னர் அதனை அங்கே போட்டு விட்டுச் சென்று விட்டார்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். தடயங்களை அழிக்கவே இவ்வாறு அவர்கள் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

இக்கொலைகள் நன்கு திட்டமிடப்பட்டு நடந்தேறியுள்ளது. இலங்கையில் இதுபோன்ற கொலைகள் கடந்த காலங்களை விட மிக அதிகளவில் தற்போது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

இதே வேளை 21 வயதான பல்கலைக் கழக கலைப்பீட மாணவி ஒருவர் எல்பிட்டிய பஸ் தரிப்பிடத்தில் மர்மமான முறையில் சனிக்கிழமை கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.