Advertisement

Main Ad

சாய்ந்தமருது-15 ஆம் பிரிவில் சாதனை படைத்தோர் பாராட்டி கௌரவிப்பு!



சாய்ந்தமருது-15 ஆம் பிரிவில் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்தோரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (13-05-2014) மாலை சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய முன்றலில் நடைபெற்றது.

சாய்ந்தமருது-15 ஆம் பிரிவு கிராம சேவகர் எம்.எம்/நாஸர் தலைமையில் இடம்பெற்ற இநீகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் மு.கா. குழுத் தலைவரும் உலக சமாதான பேரவையின் இலங்கைக்கான தூதுவருமான ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், சாய்ந்தமருது– மாளிகைக்காடு உலமா சபைத் தலைவர் சட்டத்தரணி என்.எம்.எம்.முஜீப் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர் எம்.எம்.நஜீம், கிராம சேவை நிர்வாக அதிகாரி எம்.எம்.நளீர், அதிபர் எம்.எம்.இல்யாஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலின் பிரத்தியேக செயலாளர் ஸீ.எம்.முனாஸ், ஜப்பார் மௌலவி உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது சாய்ந்தமருது-15 ஆம் பிரிவில் இருந்து 2013ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிருவாக சேவை பரீட்சையில் சித்தியடைந்த ஏ.முஹம்மட் ஹஸீன், அல்ஹாபிழ் பட்டம் பெற்ற ஏ.எப்.முஹம்மட் உஷாமா, ஏ.எப்.முஹம்மட் யாஸிர் ஆகியோரும்
பல்கலைக்கழக அனுமதி பெற்ற ஏ.எப்.பாத்திமா அஸ்மா (மருத்துவ பீடம்) எஸ்.கியாசுல் ஜுமானா சிறின் (பொறியியல் பீடம்), எம்.ஐ.எம்.பாத்திமா அப்சனா (விஞ்ஞான பீடம்), ஏ.அஹமதுல்லாஹ் தஸ்னீம் (வர்த்தக பீடம்), ஏ.எப்.பாத்திமா சுமையா (கலைப்பீடம்), ஏ.ஆர்.பாத்திமா றிஸ்னா (கலைப் பீடம்), ஏ.ஜே.பாத்திமா ஸரபத் (கலைப் பீடம்) ஆகிய மாணவிகளும்
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் அதிதிறமைச் சித்தி பெற்ற எம்.எச்.பாத்திமா தஸ்னிம் (9 ஏ) , எப்.இஸ்ஸத் ஸஹானா (9 ஏ), எம்.ஏ.ஸயினப் ஸயுமின் அனார் (8 ஏ) ஆகிய மாணவிகளும் 5 ஆம்ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் நூறுக்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற சில மாணவர்களும் விருது, சான்றிதழ் மற்றும் பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதேவேளை இந்நிகழ்வில் உலக சமாதன பேரவையின் இலங்கைக்கான தூதுவராக நியமனம் பெற்றுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீலும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.