Cricket bat- துடுபபு மட்டை : 
 
இது வழக்கமாக வில்லோவ் (willow)மரத்திலிருந்து பெறப்படும் பலகையின்மூலம் தயாரிக்கப்படுகின்றது.இம்மரப்பலகையானது கடினமானது ஆனால் நிறை குறைவானது,வேகமாக வரும் பந்தினால் சேதப்படுத்தப்படாதது,அதிர்வுகளை உறுஞ்சாதது.
இது பின்னர் லின்சீட்(linseed oil) எண்ணையினைக்கொண்டு பதப்படுத்தப்படுகின்றது.இதன்மூலம் நீண்ட நாட்கள் பாவிக்கக்கூடியதாக இருக்கின்றது.
துடுப்புமட்டையின் முன்பக்கமானது பாதுகாப்பான படலத்தினால் மூடப்பட்டிருக்கும்.
துடுப்புமட்டையின் தற்போதுள்ள கைபிடியானது 1880 இல் இங்கிலாந்தின் (severn railway tunnel)சிவர்ன் புகையிரத குகைவழிப்பாதையின் தலைமைப்பொறியியலாளரான(chief engineer) Charles richardson என்பவரினால் வடிவமைக்கப்பட்டது.
நீளமானது 38 inch (965 mm) க்கு மேற்படாதவாறும் அகலமானது 4.25 inch (108 mm) க்கு மேற்படாதவாறும் இருக்கும்.
நிறையானது 1.1kg இலிருந்து 1.4kg நிறையுடையதாக இருக்கும். ஆனால் இந்தியாவின் sachin tendulkar அதிகூடிய நிறையான 1.4 kg துடுபபுமட்டையினைப்பாவித்து விளையாடியுள்ளார்.
1979ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் டெனிஷ் லில்லீ(Denise lillee )அலுமினியத்தினாலான துடுப்புமட்டையினைப்பாவித்து விளையாடியுள்ளார்.தற்போது துடுப்புமட்டையானது மரத்தினால் மட்டுமே உருவாக்கப்படவேண்டுமெண்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.