வெல்லவாயவிலிருந்து ஒலுவில் இராணுவ முகாமை நோக்கிச் சென்று கொண்டிருந்த
இராணுவ ஜீப், சம்மாந்துறை மாவடிப்பள்ளி நெடுஞ்சாலையில் இரண்டாவது சின்ன
பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது வண்டியில் அமர்ந்திருந்த இராணுவ வீரர் படுகாயமடைந்துள்ளார் எனத்
தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.
