அமெரிக்கா புளோரிடா மாநிலத்திலுள்ள
ஒர்லான்டோ நகரிலுள்ள ஜோர்ஜியா மாநிலத்திலுள்ள அட்லாண்டா நகருக்கு
திங்கட்கிழமை பயணத்தை மேற்கொண்ட பயணிகள் விமானமொன்றின் இறக்கையொன்று
நடுவானில் உடைந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமானத்தின் ஜன்னலூடாக இறக்கைப் பகுதியொன்று காணாமல் போயுள்ளதைக் கண்ட பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதனையடுத்து மேற்படி டெலற்றா எயார்வேய்ஸ் 757 விமானம் அவசரக் கால
நிலைமையில் அட்லான்டா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக
தரையிறக்கப்பட்டது.