இந்தநிலையில் இலங்கையின் முன்னணி வீரர்கள் இன்னும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
குறிப்பாக மஹேல ஜெயவர்த்தன, அஞ்சலோ மெத்தியூஸ், அஜந்த மெண்டிஸ், திலகரட்ன தில்சான், குசல் பெரேரா போன்றோரே இன்னும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
எனினும் திஸ்ஸர பெரேரா மற்றும் முரளிதரன் ஆகியோர் ஏலத்துக்காக இனங்காணப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இதில் முத்தையா முரளிதரன் முன்னர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் நிர்வாகத்தினால் ஒரு கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் ஐபிஎல் நிர்வாகத்தினர் இலங்கை வீரர்களை ஏலத்தில் எடுக்காமைக்கான காரணம் குறித்து வெளியிடவில்லை.

0 Comments