Advertisement

Main Ad

ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவர் பிரசன்னம்

20140212-182704.jpg ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் சந்தேகத்திற்கு இடமான ஒருவர் பிரசன்னமாகியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தலைமையில் உடுகம பார் சந்தியில் நடைபெற்ற கூட்டத்தில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் செயற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழர் ஒருவரே இவ்வாறு சந்தேகத்திற்கு இடமான முறையில் ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது,
சநதேக நபர் கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது,
சந்தேக நபரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து, உடுகம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்,
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments