Advertisement

Main Ad

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிற்றூழியர்களின் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம்

போதனா வைத்தியசாலை முன்றிலில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கைக் குடியரசு சௌக்கிய சிற்றூழியர் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வார்ப்பாட்டமானது சிற்றூழியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உபதலைவர் கே. திருநாவுக்கரசு தலைமையில் இடம்பெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் சிற்றூழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் பல்வேறு கோரிக்கைகள் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன், தமதுகோரிக்கைகள் தொடர்பான கோசங்களையும் எழுப்பினர்.
இவ்வார்ப்பாட்டமானது, கடந்த 2014.01.16ம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கோரப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாங்க தரப்பினால் 2014.02.10ம் திகதிக்கு முன் தீர்வு எதிர்பார்க்கப்பட்டதாகவும் அது இன்னமும் வழங்கப்படாமையால் இன்றும் இவ்வாறான ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
மேலும் இவ்வார்ப்பாட்டமானது நண்பகல் 1200 மணிவரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
20140211-190553.jpg
20140211-190606.jpg

Post a Comment

0 Comments