(எஸ்.அஷ்ரப்கான்)
இலங்கையின் அதிசிறந்த உலமாக்களில் ஒருவரும், சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் ஸ்தாபகருமான ஷேகுத் தப்லீக் அலியார் ஹஸரத்தின் மறைவு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பெரும் இழப்பாகும் என்று நாபீர் பௌண்டேசன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் பொறியியலாளருமான யூ.கே. நாபீர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடும்போது,
அன்புக்குரிய அலியார் ஹஸரத்தின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். ஆரம்ப காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சம்மாந்துறையில் தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியை நிறுவி சன்மார்க்கப் பணியில் அரும் பெரும் சேவையாற்றியுள்ளார். முழு இலங்கையிலும் இவரது மாணவர்கள் மௌலவிமார்களாகவும், இன்னும் பல்வேறு உயர் அந்தஸ்துக்களிலும் இன்று வாழ்ந்து வருகின்றார்கள். சுமார் 300 இற்கும் மேற்பட்ட உலமாக்களை உருவாக்கிய பெருந்தகை இன்று எம்மை விட்டுப்பிரிந்தது சம்மாந்துறை மண்ணுக்கு மட்டுமல்ல முழு நாட்டிற்குமே பேரிழப்பாகும்.
தனது ஊர் மற்றும் சமூகத்தின் ஒற்றுமையுடன் பிற மதங்களுடனான ஒற்றுமையான வாழ்ககைக்கு அதிக பங்களிப்பு செய்துள்ள ஒருவரை இன்று நாம் இழந்துள்ளோம். அவரது இழப்பால் வாடுகின்ற அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், முஸ்லிம் சமூகத்துக்காக அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ள அன்னாரது பணிகளை ஏற்றுக்கொண்டு அழ்ழாஹூதஆலா அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற மேலான சுவர்க்கத்தை வழங்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.
0 Comments