Advertisement

Main Ad

மரத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு


(க.கிஷாந்தன்)

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொரிங்டன் தோட்டம் மோர்ஷன் பிரிவில் சவுக்கு மரத்தில் இருந்து தவறிவீழ்ந்து ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் 14.08.2017 அன்று திங்கட்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

42 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான எம்.ஜெயரட்ணம் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த நபர் தனது மரக்கறி தோட்டத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்க மரக்குற்றிகளை வெட்டுவதற்கு சவுக்கு மரத்தில் உச்சியில் ஏறிய நிலையில் தவறி கீழே விழுந்து தலையடிபட்டதினால் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் அக்கரப்பத்தனை வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments