சிறந்த கல்வியியலாளர்களின் மூலமாகவே சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்
சிறந்த கல்வி மாத்திரமே ஒரு சமூகத்தின் நிலையான சொத்தாகும். அத்தகைய கல்வியினூடாகவே சமூகத்தின் பிரச்சினைகள் மற்றும் அபிலாசைகளை உரிய விதத்தில் முன்கொண்டுசென்று தீர்வுகளை வென்றெடுக்க முடியும். துரதிஸ்ட வசமாக எமது சமூகத்தின் கல்வி நிலை மிகவும் வீழ்ச்சியினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்திற்கான போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அன்வர் வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கப்பட்ட மாணவர்களுக்கான தளபாடங்கள் என்பவற்றினை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் அன்வர் வித்தியாலய கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் கலந்துகொண்டு பொருட்களை கையளித்துவிட்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
ஆகவே நாங்கள் எங்களது மாணவர்களின் கல்வி தொடர்பாக மிகவும் அக்கறையோடு செயற்பட வேண்டியுள்ளது. அந்த வகையில் நாங்கள் பாடசாலைகளை மையப்படுத்தி பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதன் ஒரு கட்டமாக இன்று இப்பாடசாலைக்கு மிகவும் நீண்டகால தேவையாகவிருந்த போட்டோ கோப்பி இயந்திரம் மற்றும் மாணவர்களுக்கான தளபாடங்கள் என்பனவற்றையும் வழங்கி வைத்துள்ளோம்.
சுமார் இருபது மில்லியன் ரூபாய் செலவில் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றினையும் அமைத்து வருகின்றோம். இக்கட்டட வேலைகள் மிக விரைவில் பூரணப்படுத்தப்படவுள்ளதோடு அதனூடாக எதிர்வரும் ஆண்டில் மேலும் அதிகமான மாணவர்களை இப்பாடசாலைக்கு உள்வாங்க முடியும் என எதிர்பாக்கின்றோம்.
எனவே கல்வியினை மேம்படுத்துவதற்காக எங்களால் முடியுமான அனைத்து விதமான செயற்றிட்டங்களையும் நாங்கள் முன்னெடுத்து வருவதோடு அதற்கு மேலதிகமாக சிறந்ததொரு கல்வி கற்ற சமூகம் ஒன்றினை கட்டியெழுப்ப பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.
0 Comments