( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர்ப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் விசேட தேவையுடையோருக்கு பல்வேறு சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடக் கூடிய விதத்தில் ரூபாய் 25,000.00 பெறுமதியான காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முர்ஷித் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, உரியவர்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஏ.ஜெமீலா புஹாது, சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் ஏ.மஜீட் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சமூக சேவை அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபாய் 1,46,000.00 நிதி தெரிவு செய்யப்பட்ட 07 பயனாளிகளுக்கு பங்கிட்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments