-முஹம்மட் அப்லால் அபுல்லைஸ்-
கிழக்கின் முதலாவது அரச அங்கீகாரம் பெற்ற தாதி உதவியாளர் தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2017/08/25ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் சென் ஜூடி தாதியர் பயிற்சிப் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் தாதியர் பாடசாலையின் பதிவாளர் ஜனாப் N.T.ஆதம்லெவ்வை அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்தது...
இன் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்கள் சென் ஜூடி தாதியர் பயிற்சிப் பாடசாலையின் தலைமை நிர்வாக உத்தியோகத்தரும் உதவிக்கல்விப் பணிப்பாளருமான ஜனாப் M.A.A. வாஹிட் அவர்களும் மற்றும் சென் ஜூடி தாதியர் பயிற்சிப் பாடசாலையின் பொது முகாமையாளர் ஜனாப் M.M.சப்ராஸ் மன்சூர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்...
விஷேட அதிதியாக தாதியர் பயிற்சிப் பாடசாலையின் தலைமை பயிற்சி உத்தியோகத்தர் வைத்தியர் M.A.C.கலாமுத்தீன் அவர்களும் மற்றுமொரு விஷேட அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார் கல்முனை அஷ்ஃரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சிரேஷ்ட தாதி உத்தியோகத்தரும் தாதியர் மேற்பார்வையாளருமான ஜனாப் M.நபருல்லாஹ் அவர்களும்
கெளரவ அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்கள் ஆசிரிய ஆலோசகர் ஆசிரியர் திரு லக்குனம் அவர்களும் , ஆசிரியர் M.ஜீவரோத்தினம் அவர்களும் , சிரேஷ்ட ஊடகவியலாளரும் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஆலோசகருமான ஜனாப்.A.L.M.சலீம் அவர்களும், பிரபல சமூக சேவையாளரும் ஜமால்தீன் அரிசியாலை உரிமையாளருமான ஜனாப் M.M.ஜமால்தீன் அவர்களும், பிரபல சமூக சேவையாளரும் தாதியர் பயிற்சிப் பாடசாலையின் நிருவாக உறுப்பினறுமான ஜனாப் M.M.நிப்ராஸ் மன்சூர் அவர்களும், மற்றும் தாதியர் பயிற்சிப் பாடசாலையின் விரிவுரையாளர்கள் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்....
இன் நிகழ்வின் போது அரச தாதி உதவியாளர் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது...
0 Comments