Advertisement

Main Ad

பிரதி அமைச்சர் ஹரீசின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கட்டட திறப்பு விழா


(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை மட்டுப்படுத்தப்பட்ட அல் புஸ்ரா ஆழ்கடல் மீன்பிடி கடல்சார் உற்பத்தி சந்தைப்படுத்தல் இயந்திரப்படகு உரிமையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உபயோகத்திற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீசின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட அலுவலக கட்டட திறப்பு விழா இன்று வியாழக்கிழமை (17) சங்கத் தலைவர் ஐ.எல். மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த அலுவலக கட்டடத்தை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் சட்டத்தரணி ஏ. றோசான் அக்தர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம். நிசார், ஏ.பி. ஜெஃபர் ஹாஜியார், மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் எ.எம். றபீக், பிரதம கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எல். சம்சுதீன், கடற்றொழில் பரிசோதகர் எம்.எஸ். நிப்றாஸ், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம் தௌபீக், அல் புஸ்ரா சங்க உறுப்பினர்கள், மீனவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீசின் சேவையினைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்து நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments