Advertisement

Main Ad

தேர்தல் வருவதால் வரிகள் குறைகின்றன.


இவ்வரசு தேர்தல் நெருங்க வரிகளை குறைத்து மக்கள் செல்வாக்கை பெற முயல்வதை அறிந்து செயற்பட வேண்டுமென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள்

சந்திப்பு இந்தோ நிகழ்வு ஒன்றில் மேலும் கருத்து தெரிவிக்கையில்..

சில குறிப்பிட்ட வாகனங்களுக்கு 90 வீத வரி குறைப்பும் நெட் கட்டணங்களுக்கு 10 வீத வரியும் குறைக்கப்படவுள்ளது.இவ்வரசு இத்தனை நாளும் குறைக்காத வரியை ஏன் திடீரென குறைத்துள்ளது. இத்தனை நாளும் வராத தேர்தல் தற்போது வருகின்றதல்லவா?

இவ்வரசானது தேர்தலுக்கு முன்ப ஒரு முகத்தையும் தேர்தல் முடிந்த பின்பு இன்னுமொரு முகத்தையும் வெளிக்காட்டுவதை இதனூடாக அறிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது. இதனூடாக இலங்கை மக்கள் இவ்வரசின் உண்மையான முகத்தை அறிந்துகொள்ளலாம். இப்படி இரட்டை வேடம் கொண்ட அரசை நம்பமுடியுமா ?

அண்மைக் காலத்தில் இப்படி வரிகளை திடீரென குறைக்குமளவு எந்தவிதமான திடீர் பொருளாதார மாற்றங்களும் இடம்பெறவில்லை.நாட்டு வழங்களை விற்று வரும் பணத்தை நம்பி வரிகளை குறைப்பது உண்மையான பொருளாதார வளர்ச்சியல்ல.

இந்த அரசால் தேர்தல் நெருங்கும் போது வரியை குறைத்து ஆட்சி செய்ய முடியுமாக இருப்பின் அதற்கு முன்பும் ஆட்சி செய்யதிருக்க  முடியும் ஆனால் அதை செய்யவில்லை.

தேர்தலை மையப்படுத்தி வெற்றி வியூகம் அமைப்பதென்றாலும் அதனை மக்கள் அறியாதவாறு சாதூரியமாக கையாள வேண்டும். இச் சிறு விடயத்தை கூட சாதூரியமாக கையாள முடியாதவர்கள், பல நெருக்கடிகள் சூழ்ந்துள்ள இந் நாட்டை எப்படித் தான் கையாளப்போகிறார்களோ?

இவ்வரசுக்கு மக்கள் நலனை விட தங்களது சுயநலனே மிக முக்கியமானதாகும்.இந்த பூச்சாண்டிகளையெல்லாம் நம்பி வாக்களிக்கும் காலம் மலையேறிவிட்டது. இந்த அரசின் பித்தலாட்டங்களை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.இதனை அறிந்து எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என நம்புகிறோம்.

சலுகைகளை வழங்கி மக்களை முட்டாள்களாக்கி நாட்டு சொத்துக்களை விற்பனை செய்ய மேற்கொள்ளும் இந்த அரசின் முயற்சியை தோற்கடிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments