Advertisement

Main Ad

400M கொண்ட மைதானமாக அல் மனார் மத்திய கல்லூரி மைதானம் விஸ்தரிப்பு


(அகமட் எஸ். முகைடீன்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மைதான விஸ்தரிப்பு வேலைத்திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை (18) நேரில் சென்று பார்வையிட்டார்.
   
இதன்போது கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம். றகீப், ஏ.எல்.எம். முஸ்தபா, எம்.எஸ். உமர் அலி, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், அல் மனார் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள், விளையாட்டு ஆர்வலர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

குறித்த மைதான விஸ்தரிப்பு வேலைத்திட்டத்தை விரைவாக பூரணப்படுத்துவதற்கு ஏதுவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் நகர திட்டமிடல் அமைச்சின் ஊடாக 50 இலட்சம் ருபா நிதியினை பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பிரதி அமைச்சர் இதன்போது உறுதியளித்தார். இம்மைதானமானது பார்வையாளர் அரங்கு உள்ளிட்ட 400 மீற்றர் கொண்ட மைதானமாக விஸ்தரிப்புச் செய்யப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments