Advertisement

Main Ad

ஆஸ்திரியாவில் இன்று உலகின் அழகான மீசை, தாடி போட்டி: வித்தியாசமான தாடிவாலாக்கள் குவிந்தனர்


உலகில் அழகான, வித்தியாசமான தாடி, மீசை வைத்து இருப்பவர்களை தேர்வு செய்வதற்கான போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 1990ம் ஆண்டு முதன் முதலாக இந்த போட்டி நடத்தப்பட்டது. தற்போது 25–வது ஆண்டு மீசை, தாடி போட்டி ஆஸ்திரியாவில் நடைபெறுகிறது.

இதையொட்டி ஆஸ்திரியாவில் உள்ள லியொகேஸ் பகுதியில் இருக்கும் அல்பைன் கிராமத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் கலந்து கொள்வதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து விதம், விதமான தாடி, மீசை அலங்காரத்துடன் ஏராளமானவர்கள் குவிந்துள்ளனர்.

அழகான தாடி வைத்து இருப்பவர்களுக்கு தனியாக போட்டி நடத்தப்படும். அது போல வித்தியாசமான மீசை வைத்து இருப்பவர்களுக்கு தனியாக போட்டி நடத்தப்படும்.

தாடி, மீசை இரண்டையும் ஒருங்கிணைத்து வித்தியாசமான அலங்காரம் செய்திருப்பவர்களுக்கு தனி போட்டி நடத்தப்படும். இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு உலகின் சிறந்த தாடியாளர் என்ற சாம்பியன் பட்டம் வழங்கப்படும்.

உலகம் முழுவதிலும் இருந்து விதம், விதமான மீசை, தாடிவாலாக்கள் குவிந்து இருப்பதால் அல்பைன் கிராமம் கோலாகலமாக உள்ளது.