மு.காவின் வேட்பாளர்கள் தெரிவு நல்லாட்சிக்கான பயணத்திற்கு உரமூட்டுவதாக அமைதல் வேண்டும்
( அபு அலா )
இன்று நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சிகளிலும் அதற்கான வேட்பாளர்களை நிறுத்துகின்ற பணிகளிலும் மும்மூரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அதனடிப்படையில், இந்நாட்டு முஸ்லிம்களின் அதிகப்படியான ஆதரவினைப் பெற்றுக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம் தேர்தலை எதிர்கொள்வதற்கான பல்வேறு வியூகங்களை வகுத்துக்கொண்டு, அதற்கான தமது கட்சியின் சார்பிலான வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்தில், மு.காவின் வேட்பாளர்கள் தெரிவு விடயத்தில் முஸ்லிம் சிவில் சமூகம் எதிர்பார்க்கின்ற மிக முக்கியமான விடயம்தான், அது தேர்தலில் நிறுத்துகின்ற வேட்பாளர்கள் நாட்டின் நல்லாட்சியை நோக்கிய பயணத்திற்கு உரமூட்டுவதாக அமைதல் வேண்டும்.
அந்தவகையில், நாட்டின் தற்போதைய தலைமையும் ஏனைய பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகளும் நாட்டின் நல்லாட்சியை நிலைநிறுத்துகின்ற பயணத்தில் தடுமாறினாலும் திசைமாறினாலும், மு.காவின் நடவடிக்கைகளானது அவற்றையெல்லாம் கடந்து முன்மாதிரிமிக்கதாக அமைதல் வேண்டும் என முஸ்லிம் சிவில் சமூகம் எதிர்பார்க்கின்றது.
குறிப்பாக, அமைக்கப்படவிருக்கின்ற பாராளுமன்றத்திற்கு தனது கட்சியின் சார்பாக தெரிவு செய்து அனுப்பப்போகின்ற வேட்பாளர்கள் விடயத்தில் மிகவும் நிதானமானதும் தெளிவானதுமான நிலைப்பாட்டினை வெளிப்படையாகக் கடைப்பிடித்து, நல்லாட்சிக்கு உரமூட்டுகின்ற முன்மாதிரிமிக்க முஸ்லிம் அரசியல் கட்சியாக தம்மை அமைத்துக் கொள்ள வேண்டும்.
அந்தவகையில், மு.காவானது தனித்தோ அல்லது கூட்டுச்சேர்ந்தோ தேர்தலில் களமிறங்கினாலும், அது தனது கட்சி சார்பாக களமிறக்கப் போகின்ற வேட்பாளர்கள் தெரிவில், சமூகம் எதிர்பார்க்கின்ற பின்வரும் தன்மைகளையும் பண்புகளையும் கொண்ட நபர்களை வேட்பாளர்களாகத் தெரிவு செய்வதில் மு.காவானது ஆர்வம் காட்டுதல் வேண்டும்.
அந்தவகையில், மு.கா நிறுததப் போகின்ற ஒரு வேட்பாளர் தனிப்பட்ட ரீதியில் சிறந்த கொள்கைவாதியாகவும், நல்லாட்சியின் பண்புகளை புரிந்து கொண்டு அதன்பால் தமது அரசியலைச் செய்பவராகவும் சிறந்த கல்விப் பின்புலங்களைக் கொண்டவராகவும் தலைமைத்துவப் பண்புகளைப் பெற்றவராகவும் மொழித்திறன், பேச்சாற்றல், விவாதிக்கும் திறன், விடயங்களை முன்வைக்கும் ஆற்றல் மற்றும் அரசியலறிவு உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
மேலும், எந்த சந்தர்ப்பத்திலும் இறைவனுக்குப் பயந்து கருமமாற்றுபராகவும் சிறந்த ஒழுக்கமும் நன்னடத்தையும் கொண்டவராகவும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டவராகவும், இனவாதம், பிரதேச வாதம் போன்ற மோசமான தன்மைகளை கடைப்பிடிக்காதவராகவும் இருத்தல் வேண்டும்.
அந்த வேட்பாளர், சமூகம் சார்ந்த விடயத்தில், சமூகத்தோடு தேர்தல் காலங்களில் மாத்திரமன்றி அவர்களது சுக துக்கங்களில் இரண்டரக்கலந்து செயற்படுபவராகவும் மக்களோடு சிறந்த தொடர்பாடலைக் கொண்டவராகவும் சமூகத்தின் அழைப்பிற்கு உடனடியாகப பதிலளிப்பவராகவும் சமூகத்தின் உரிமைப் போராட்டம் மற்றும் அதனது தேவைகள் மற்றும் பிரச்சினைகளைப் பற்றிய சிறந்த தெளிவும் புரிதலுமுள்ளவராகவும் காணப்படுதல் வேண்டும்.
மேலும், அவர் பாராளுமன்றத்தில் சட்டங்கள் நிiவேற்றப்படுகின்ற போது, ஆளுந்தரப்பிலிருந்தாலும் எதிர்த் தரப்பிலிருந்தாலும் தனது கட்சியினதும் தான் சார்ந்துள்ள சமூகத்தினதும் இந்நாட்டினதும் தமது மார்க்கமான இஸ்லாத்தினதும் கொள்கைக்கும் நலனுக்கும் முரணில்லாத விதத்தில் தெளிவான குறிக்கோளுடன் செயற்பட்டு ஆதரிக்கவோ, எதிர்க்கவோ வேண்டும். அதற்கான காரணத்தை தெளிவாக தன்னை பாராளுமன்றம் அனுப்பிய மக்களுக்கு உடனுக்குடன் எடுத்துரைத்தல் வேண்டும்.
மேலும், ஊழல் மற்றும் மோசடிகளில் வெறுப்புற்று தமது பணியை முன்னெடுக்கக் கூடியவாராகவும் இருத்தல் வேண்டும். இங்கு மிக முக்கியமாக தனக்கு நிதி கிடைக்கின்ற வழிமுறைகள், அதைச் செலவு செய்கின்ற முறைமைகள், தனக்கு கிடைக்கின்ற அபிவிருத்தி திட்டங்கள் அதனை அமுல்படுத்துகின்ற விதம் என்பனவற்றில் வெளிப்படைத் தன்மைகளைக் கடைப்பிடிப்பவராக இருத்தல் வேண்டும்.
அதேபோன்று, தனது கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் திட்டமிடல், அமுலாக்கம் செய்தல் மற்றும் அதனை கண்காணித்தல் ஆகிய கட்டங்களில் தனது கட்சிக்கு வாக்களித்த சாதாரன பொது மக்களின் பங்கேற்ப்பினை பெறுபராக இருத்தல் வேண்டும்.
அதுமாத்திரமன்றி, தமது கட்சி அரசாங்க செல்வாக்கு நிலையில் இருக்கின்ற போது தனது கட்சியினால் வழங்கப்பட முடியுமான நியமனங்கள் விடயத்தில்; முறையான நியமங்களைப் பின்;பற்றுபவராக இருத்தல் வேண்டும்.
மேலும்;, ஒரு தேர்தலில் தம்மை ஆதரித்த மக்களை கவனிப்பது என்பது இன்றிமையாததொரு அம்சமாகும். ஆனால், தன்னை நிராகரித்த மக்களை எவ்வாறு கவரலாம்? ஏன் அவர்கள் தம்மை நிராகரித்தார்கள்? அதிலுள்ள நியாயங்கள் என்ன? அதற்காக நமது கட்சி விட்ட அல்லது தான் விட்ட தவறு என்ன? என்பது தொடர்பாக ஆய்வுகளைச் செய்பவராக இருத்தல் வேண்டும்.
மேலும், தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால், இது இறைவனால் தரப்பட்ட ஒரு அமானிதம், இது தன்னையும் தனது நிலைப்பாட்டினையும் சோதிப்பதற்காக தரப்பட்டிருக்கின்ற சோதனைப் பொருளாகும். இதுபற்றி நிச்சயமாக நான் மறுமையில் இறைவனால் விசாரணை செய்யப்படுவேன் என்ற உணர்வுடன் செயற்படல் வேண்டும்.
தனக்கு கிடைக்கின்ற வாகனங்கள், வசிப்பிடங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், ஒதுக்கீடுகள் அனைத்தும் அமானிதங்கள் என்ற தூய்யவுணர்வுடன் முறையாக பயன்படுத்துவதுடன், குறித்த நோக்கங்களுக்காகவே அவைகளைப் பயன்படுத்துபராக இருத்தல் வேண்டும்.
எனவே, இவ்வாறான மேற்போன்ற அம்சங்களில் மு.காவும் அதன் தலைமையும் முழுமையாகக் கவனம் செலுத்தி, கொண்டு கரிசனையோடு செயற்ப்பட்டு, எதிர்கொள்ளப் போகும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில், தனது கட்சி நியமிக்கப் போகின்ற நபரிடம் உள்ள துறைசார் அறிவு, திறன், ஆற்றல், ஆளுமை, சாதிக்கும் திறன், சோரம் போகாத தன்மை, இறையுணர்வு, பொறுப்புக்களை வகிக்கும் ஆற்றலும் பொறுப்புக் கூறக்கூடிய இயலுமையும் மற்றும் துறைசார் நிபுணத்துவம் போன்ற தகுதி நிலைகளையும் கவனத்திற் கொண்டு வேட்பாளர் தெரிவுகளை மேற்;கொண்டு, இந்நாட்டிலுள்ள ஏனைய கட்சிகளுக்கும் சமூகங்களுக்கும் முன்னுதாரணங்களைக் காண்பிப்பதற்கு முன்வருல் வேண்டும்.
மாறாக, மு.காவின் தலைமையும் அதன் செயற்குழுவும் தனது கட்சிக்கான வேட்பாளர்கள்; தேர்வில்; ஒரு தனிநபர் கொண்டுள்ள பணம், வசதிவாய்ப்புக்கள், பகட்டு மற்றும் குடும்பச் செல்வாக்கு போன்ற புறக் காரணிகளைத் தகுதிக்கான வரையறைகளாகக் கருத்திற் கொள்ளக் கூடாது.
அப்போதுதான் இந்நாடும் இந்நாட்டு மக்களும் எதிர்பார்க்கின்ற நல்லாட்சியை நிலை நிறுத்துகின்ற பயணத்தில், முஸ்லிம்களின் தனித்துவ அடையாளக் கட்சி என்ற வகையில் மு.காவானது காத்திரமானதும் முன்மாதிரியானதுமான பங்களிப்பினைச் செலுத்தியதாக அமையும்.
அவ்வாறில்லாவிட்டால், நிச்சயமாக முஸ்லிம் அடையாளம் தாங்கிய அரசியல் கட்சி என்ற பெயரில் மு.கா புரிகின்ற அனைத்துத் தவறுகளும், அதிலும் முக்கியமாக வேட்பாளர் தெரிவில் விடப்படும் தவறுகளானது இந்நாட்டின் முஸ்லிம்களுக்கு இழுக்கையும் இம்சைகளையுமே தோற்றுவிக்கும் என்பதில் ஐய்யமில்லை.
அவ்வாறு விடப்படும் தவறுகளால், மு.காவானது தமது கட்சியையே காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலைமை எதிர்காலத்தில் ஏற்படலாம். அதிலிருந்து கட்சியை காப்பாற்றுவதற்கான முனைப்பை இப்போதே கட்சிதமாக மு.காவின் தலைமையும் இவ்விடயத்தில் மேற்கொள்ள முன்வருதல் வேண்டும்.