ஷெஜெய்ங் மாகாணத்தில் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என ஷாங்காய் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
1949 ஜூலையில் தாக்கிய புயலுக்குப் பின்னர் இப்பகுதியைத் தாக்கும் ஆக மோசமான புயலாக இது இருக்கும் என சீனாவின் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
ஃபிலிப்பைன்ஸில் இந்தப் புயல் தாக்கி ஏற்கனவே ஐந்து பேர் உயிரிழந்திருந்தனர்; தய்வானிலும் ஜப்பானிலும் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

