( அஸ்ரப் ”ஏ சமத் )
எனது மனைவி
ஒரு முஸ்லீம் பாத்திமா ரவி கருநாயக்க எனக்கு முஸ்லீம்களது மத,தொழுகை கலை
கலாச்சார விடயங்களும் அனைத்தும் தெரியும். ஆனால் கடந்த கால அரசு
பள்ளிவாசல்களை முஸ்லீமகளது கலை கலாச்சார விடயங்களை சீரலித்தது. அந்த
யுகத்தை மீள வரமுடியாமல் நாம் தடுக்க வேண்டும்.
அது மட்டுமா
முஸ்லீம்களது வா்த்தகத்தையும் சீரலித்தாா்கள். முஸ்லீம் ஒருவா் ஏற்றுமதி
இறக்குமதி வியாபாரம் செய்தால் கூடுதலான சுங்கத் தீர்வை மற்றும்
இடைஞ்சல்களை ஏற்படுத்தினாா்கள். ஆனால் நான் நிதி யமைச்சராக வந்த பிறகு
முஸ்லீம்களுக்கு தமது வியாபாரத்தை செய்வதற்கு எவ்வித பிரச்சினையும்
இருக்காது. என நிதியமைச்சா் ரவி கருநாயக்க தெரிவித்தாா்.







