(க.கிஷாந்தன்)
இந்த மாதம்17ம் திகதி கதிர்காமம் கொடியேற்றத்திற்கு கலந்து கொள்வதற்கு
கொட்டகலை டிரேட்டன் தோட்டப்பகுதியில் உள்ள பக்தர்கள் 3வது முறையும் பாதயாத்திரையை
11.07.2015 அன்று ஆரம்பித்தார்கள்.
கொட்டகலை பகுதியிலிருந்து பக்தர்கள் 11.07.2015 அன்று காலை
வேளையில் இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.
கொட்டகலையிலிருந்து 350 கிலோ மீற்றர் தூரம் பாதயாத்திரையாக
செல்வார்கள். ஒரு நாளைக்கு 58 கிலோ மீற்றர் பாதயாத்திரையாக பயணிக்கும் இவர்கள்
நுவரெலியா பண்டாரவளை, வெல்லவாய, புத்தல வழியாக இந்த மாதம் 17ம் திகதி கதிர்காமத்திற்கு
செல்வார்கள்.



