(க.கிஷாந்தன்)
மலையகத்தில் 11.07.2015 அன்று
கடும் மழை பெய்து வரும் சூழ்நிலையிலும் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு ஆயிரம் ரூபா
சம்பளம் வேண்டுமென கோரி 6வது நாளான 11.07.2015 அன்றும் மெதுவான பணி செய்யும் நடவடிக்கையை
மேற்கொண்டு வருவதோடு சில தோட்டங்களில் தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக கொழுந்து பறிக்கும்
நடவடிக்கையை மேற்கொண்டு வருவதோடு இன்னும் சில தோட்டங்களில் ஆண்களும், பெண்களும் இணைந்து
தேயிலை மலையில் உள்ள புற்களை பிடுங்கும் நடவடிக்யைில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அத்தோடு 6வது நாளான
11.07.2015 அன்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கையை கம்பனிகார்கள் செவிசாயிக்கவில்லையென
தொழிலாளர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.






