Advertisement

Main Ad

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் முகமாக நுவரெலியா மாவட்ட வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

(க.கிஷாந்தன்)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்கள், ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் முகமாக நுவரெலியா மாவட்ட வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

11.07.2015 அன்று பிற்பகல் கையெழுத்திடும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள மஹாவெலி கேந்திர நிலையத்தில் இடம் பெற்றது.

இதன்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், கட்சியின் தலைவர் முத்து சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவி அனுஷியா சிவராஜா ஆகியோர் நுவரெலியா மாவட்ட வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்.