Advertisement

Main Ad

சாம்பியன்ஸ் லீக் 20-20 தொடர் ரத்துசெய்யப்பட்டது பி.சி.சி.ஐ. அறிவிப்பு....



செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த சாம்பியன்ஸ் லீக் 20-20 தொடர் ரத்துசெய்யப்பட்டது என்று பி.சி.சி.ஐ. அறிவித்து உள்ளது.

ஐ.பி.எல். போட்டியை தொடர்ந்து சாம்பியன்ஸ் ‘லீக்’ 20 ஓவர் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. 2009–ம் ஆண்டு இந்த போட்டி முதல் முறையாக நடத்தப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து ‘சாம்பியன்ஸ் லீக்’ போட்டியை நடத்துகின்றன. இதுவரை நடந்த 6 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா 2 முறை கோப்பையை வென்று உள்ளது. நியூசவுத் வேல்ஸ், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் தலா 1 முறை சாம்பியன் பட்டம் வென்று உள்ளது.

இந்த ஆண்டுக்கான 7–வது சாம்பியன் ‘லீக்’ போட்டி குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகமல் இருந்தது. இந்தியாவில் ஐ.பி.எல். போட்டி அளவுக்கு சாம்பியன்ஸ் ‘லீக்’ ஆட்டத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்புஇல்லை. இதனால் இந்தப்போட்டியை அடியோடு ரத்து செய்யப்படலாம் என்றும் இதுதொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் சாம்பியன்ஸ் லீக் 20-20 தொடர் ரத்துசெய்யப்பட்டது என்று பி.சி.சி.ஐ. அறிவித்து உள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த சாம்பியன்ஸ் லீக் 20-20 தொடர் ரத்துசெய்யப்பட்டது என்று பி.சி.சி.ஐ. அறிவித்து உள்ளது. எதிர்பார்த்தஅளவு வரவேற்பு இல்லாத காரணத்தினால் போட்டி நிறுத்தப்படுவதாக பி.சி.சி.ஐ. விளக்கம் அளித்து உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியால் சாம்பியன்ஸ் ‘லீக்’ 20 ஓவர் போட்டியில் கலந்துக் கொள்ளமுடியாது. போட்டியில் சென்னை அணி இல்லை என்றால் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என கூறப்படுகிறது. எனவே இந்தமுடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்றும் தகவல் வெளியாகிஉள்ளது.