(க.கிஷாந்தன்)
அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் புனித அன்னம்மாளின் 186வது வருடாந்த
திருவிழா 12.07.2014 அன்று கண்டி மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய வியானி
பெர்ணான்டோ ஆண்டகை அவர்களோடு பங்குதந்தை லெஸ்லீ பெரேரா ஆகியோரல் இணைந்து திருப்பலி
ஒப்புக் கொடுக்கப்பட்டது.
திருப்பலி பூசையின் பின் புனித அன்னம்மாளின் திருச்சுரூப ஊர்வலம் ஆலயத்தில்
இருந்து அட்டன் பிரதான பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
அதனை தொடர்ந்து புனித அன்னம்மாளின் சுரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
காலை 7.30 மணிக்கு சிங்களம் தமிழ் இருமொழிகளிலும் அதன்பின் 10.30 மணியளவில்
விசேட திருப்பலியும் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.
இதில் அதிகளவான கத்தோலிக்க மக்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தார்கள்.








