இன்று காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது இந்த தீர்மானமெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இதற்கிடையில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தன்னைப் பற்றித் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு வரும் 17ஆம் பதிலளிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் விஷேச கூட்டமொன்றுக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த மகிந்த ராஜபக்ஷ ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்தார்.
நேற்று ஊடகங்களிடம் பேசிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, எதிர்வரும் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்படுவார் என்று கூறியிருந்தார்.

