அவ்வாறு ஐந்து வருடங்களாக அவர் வளர்த்து வந்த பசு ஒன்று கன்றை ஈன்றுள்ளது. கன்றுக்குட்டி பிறந்த உடன் அப்பகுதி மக்கள் அனைவரையும் அது ஆச்சரியப்பட வைத்தது. நான்கு கால்களுடன் கன்றுக்குட்டிகள் பிறப்பது தான் இயல்பு. ஆனால் இந்த கன்றோ அறு கால்களுடன் பிறந்தது. நான்கு கால்கள் வழக்கமாக இருக்கும் இடத்தில் இருந்தபோதும் கன்றுக்குட்டியின் கழுத்துக்கு கீழே மேலும் இரு கால்கள் இருந்தன.
ஆனால் இந்த இரு கால்களால் கன்றுக்குட்டிக்கு எந்த இடர்பாடும் ஏற்படவில்லை. மற்ற கன்றுகள்போன்று இது துள்ளிக்குதித்து ஒடுவதாக சாங் தெரிவித்தார். நாளுக்கு நாள் அக்கன்றை பொதுமக்கள் பலரும் பார்த்து மகிழும் வேளையில் ஊடகத்துறையினரும் அதை புகைப்படம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.