Advertisement

Main Ad

ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை

jabir jusai


சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமிற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டணை விதித்துள்ளது.

1991 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா தனது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்தாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதேவேளை, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தமிழகத்தில் அ.தி.மு.க ஆதரவாளர்கள் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில், பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நீடித்துள்ளது.

ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் கோயில் அருகே உள்ள கடைகளை மூடக்கோரி அ.தி.மு.க ஆதரவாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர். அங்கு இதனால் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.