பதுளையில் பல்பொருள் அங்காடி சந்தையில் முதலாளி ஒருவர் பெண் ஊழியரிடம் தவறாகக நடந்து கொள்ளும் காட்சி கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. கடை முதலாளி அங்கு வேலை செய்யும் யுவதி ஒருவரின் கையைப் பிடித்துள்ளது போன்ற காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.தற்பொழுது இந்தச் செய்தியானது அனைத்து இனையத்தளங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்தச் காட்சி பொய்யானதென்றும் தனது கடையில் எந்த ஒரு யுவதியும் துக்ஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தப்பபடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருப்பினும் தற்பொழுது கடை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். அவர் அதற்கு முன் வைக்கும் காரணம் இந்த பொய்யான வதந்தியால் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக் தெரிவித்துள்ளார். இது சம்பந்மாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.